Monday, June 21, 2021

16 வது தமிழ் நாடு சட்டபேரவையின் முதல் கூட்டத் தொடரில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையின் முக்கிய துளிகள்..

“அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண் - பெண் சமத்துவம், அனைவருக்கும் பொருளாதார நிதியை அடிப்படையாக கொண்டிருக்கும் - மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது” “விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் - தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்” “100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூக நீதியை உறுதி செய்துள்ளது - தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்” “மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்” “தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு, அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்” “இதற்காக, கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும் ரத்து செய்யவும், தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளப்படும் - தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்” “கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட நமது மீனவர்களின் சமூக நலன்களை இந்த அரசு பாதுகாக்கும்” “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள், தமிழ்நாட்டில் புத்துயிர் ஊட்டப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும்” தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்; மாநிலத்தின் நிதிநிலை குறித்த முழுமையான விவரம் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரியவரும் பெரியார் காண விரும்பிய சுயமரியாதை சமூகமாகவும் உரிமை பெற்ற மக்களாகவும் எல்லா வளமும் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதி ஏற்று உள்ளது நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டுப்லோ, ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் , டாக்டர் எஸ் நாராயணன் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும். குழு உறுப்பினர்கள் பரிந்துரை அடிப்படையில் தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மாநகர கட்டமைப்பை நவீன சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக அனைவருக்குமான அரசாக தமிழக அரசு நடைபோடும்; அனைத்து மக்களும் எமது அரசு என பெருமையுடன் சொல்லும் வகையில் தமிழக அரசின் பயனம் தொடரும்.

No comments:

Post a Comment