நடப்பு செய்திகளை உடனுக்குடன் நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தி நிறுவனமான தர்மத்தின் குரல் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்..
Monday, June 21, 2021
தமிழகத்தில் அநாகரிகமான ஒரு நபர் துரதிருஷ்டவசமாக தமிழகத்தின் நிதி அமைச்சராக உள்ளார் - H.ராஜா காட்டம்!
வாக்கு வங்கி அரசியலுக்காக மத்திய அரசை எதிர்ப்பது திமுகவின் டிஎன்ஏ-வில் உள்ளது.
நீட் தேர்வினால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் கடந்த ஆண்டு நீட் தேர்வின் மூலம் 450 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் அநாகரிகமான ஒரு நபர் துரதிருஷ்டவசமாக தமிழகத்தின் நிதி அமைச்சராக உள்ளார்.
நிதி அமைச்சருக்கு நிதி பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கு இல்லை என்றும், பொறுப்புக்கு வந்ததால் அவர் உயர்ந்தவர் இல்லை என H.ராஜா கடுமையாக விமர்சித்தார்.
மத்திய அரசு ஒன்றிய அரசு என்றால், மாநில அரசு ஊராட்சியா? என்று கேள்வி எழுப்பி அவர், தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படாமலிருக்க நிதி அமைச்சரை தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும் என்றார்.
ஒன்றியம் என்ற வார்த்தை சதித்திட்டத்தின் பங்காக தெரிகிறது என கூறிய அவர் பெட்ரோல், டீசல் வரியை மாநில அரசு ஒத்துழைத்தால் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர நாங்கள் தயார் என்றார்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி வளாகத்தில், கோயில் நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளது. அதனை அமைச்சர் சேகர்பாபு மீட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக H.ராஜா தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கியது, இதில் முதல்முறை பங்கேற்றது பெருமை அளிக்கிறது. பணியில் உள்ள பெண்களுக்க...
-
தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
No comments:
Post a Comment