நடப்பு செய்திகளை உடனுக்குடன் நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தி நிறுவனமான தர்மத்தின் குரல் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்..
Saturday, June 19, 2021
தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை தொடங்கலாம்: மருத்துவர்கள் குழு பரிந்துரை!
தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர் உட்பட 8 மாவட்டங்களை தவிர, எஞ்சிய மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பொதுப் போக்குவரத்தை தொடங்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வருகின்ற 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தமைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மருத்துவ வல்லுநர்களை தொடர்ந்து முதலமைச்சர், உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
அனைத்து தரப்பினரின் கருத்தையும் பதிவு செய்து இறுதி அறிக்கை தயார் செய்யப்படும். - நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணை...
-
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கியது, இதில் முதல்முறை பங்கேற்றது பெருமை அளிக்கிறது. பணியில் உள்ள பெண்களுக்க...


No comments:
Post a Comment