நடப்பு செய்திகளை உடனுக்குடன் நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தி நிறுவனமான தர்மத்தின் குரல் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்..
Wednesday, June 30, 2021
பிரிவு உபச்சார விழாவில் டி.ஜி.பி திரிபாதி பேச்சு!
ஒரிசாவில் பிறந்து எனக்கு தமிழகமே தாய்வீடு. மனநிறைவு, மகிழ்ச்சியுடன் பொறுப்புகளை முடித்து ஓய்வுபெறுகிறேன்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்தர் பல்டி!
சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன்,அதற்காக வருத்தம் அடைந்து தற்போது பக்குவமாக செயல்பட்டு வருகின்றேன் -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்டார்.
"அண்ணா வகுத்து தந்த பாதையில் கழக ஆட்சி வீறு நடை போடும் என்பதை உறுதி ஏற்கிறேன்" - என பேரறிஞர் அண்ணாவின் வீட்டில் உள்ள பார்வையாளர்கள் குறிப்பேட்டில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எழுதிய வாசகம்!
Tuesday, June 22, 2021
தமிழ்நாட்டு வேலை - தமிழர்களுக்கே!
தமிழர்களை தவிர பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை ஆய்வு செய்து, அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
உழவர் நலனுக்கு எதிரான 3 வேளாண் சட்டம், சிறுபான்மையினரை அச்சுறுத்தும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே திமுக அரசின் உறுதியான நிலைப்பாடு - அதனை வலியுறுத்தி எதிர்வரும் நிதிநிலைக் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்!
தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது!
ஓ.என்.ஜி.சி, அரியலூரில் 10 எண்ணெய் கிணறுகளும், கடலூரில் 5 எண்ணெய் கிணறுகளும் அமைக்க விண்ணப்பித்தது. அவை ஜூன் 21ஆம் தேதி நிராகரிக்கப்பட்டன - தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு!
நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன ஆனால் தமது தாய்மொழியான தமிழை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப் பெயர்களை வைப்பதன் பின்னணி என்னவோ?
Master, Bigil,படங்களை தொடர்ந்து Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா?
- வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கேள்வி!
SBI தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணா அறிவிப்பு!
SBI ஏ.டி.எம்-களில் நூதன கொள்ளை காரணமாக, நாடு முழுவதும் Cash Deposit இயந்திரங்களில் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது - SBI தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணா!
ஜெயராஜ், பென்னீக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி!
சாத்தான் குளம் காவல் துறையினரின் கொடூர தாக்குதலில் பலியான ஜெயராஜ், பென்னீக்ஸின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர்களின் படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்.பி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சிபிசிஐடி போலிஸார் அறிவிப்பு!
ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் atccbcid@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலமோ அல்லது வாட்ஸ்அப் எண் 9498143691 மூலமோ புகார் அளிக்கலாம் - புகார் அளிப்பவரின் பெயர் மற்றும் புகார் விவரம் ரகசியமாக வைக்கப்படும்!
- சிபிசிஐடி போலிஸார் அறிவிப்பு!
Monday, June 21, 2021
தமிழக அரசு பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
குழுவில் உள்ள பொருளாதார வல்லுநர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள், பொருளாதாரக் குழுவை அமைத்தது சிறந்த நடவடிக்கை.
- ப.சிதம்பரம்
'மாபெரும் வெற்றியை நோக்கி செயல்பாடுகள் இருக்க வேண்டும்'
தற்போது பெற்றிருப்பது மாபெரும் வெற்றி அல்ல - அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியைங பெரும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும்.
- திமுக MLA.க்கள் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
குணங்குடி. அனீபா மருத்துவமனையில் அனுமதி!
பாமக முன்னாள் மாநில பொருளாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் - குணங்குடி. R.M.அனீபா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
தமிழகத்தில் அநாகரிகமான ஒரு நபர் துரதிருஷ்டவசமாக தமிழகத்தின் நிதி அமைச்சராக உள்ளார் - H.ராஜா காட்டம்!
வாக்கு வங்கி அரசியலுக்காக மத்திய அரசை எதிர்ப்பது திமுகவின் டிஎன்ஏ-வில் உள்ளது.
நீட் தேர்வினால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் கடந்த ஆண்டு நீட் தேர்வின் மூலம் 450 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் அநாகரிகமான ஒரு நபர் துரதிருஷ்டவசமாக தமிழகத்தின் நிதி அமைச்சராக உள்ளார்.
நிதி அமைச்சருக்கு நிதி பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கு இல்லை என்றும், பொறுப்புக்கு வந்ததால் அவர் உயர்ந்தவர் இல்லை என H.ராஜா கடுமையாக விமர்சித்தார்.
மத்திய அரசு ஒன்றிய அரசு என்றால், மாநில அரசு ஊராட்சியா? என்று கேள்வி எழுப்பி அவர், தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படாமலிருக்க நிதி அமைச்சரை தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும் என்றார்.
ஒன்றியம் என்ற வார்த்தை சதித்திட்டத்தின் பங்காக தெரிகிறது என கூறிய அவர் பெட்ரோல், டீசல் வரியை மாநில அரசு ஒத்துழைத்தால் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர நாங்கள் தயார் என்றார்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி வளாகத்தில், கோயில் நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளது. அதனை அமைச்சர் சேகர்பாபு மீட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக H.ராஜா தெரிவித்தார்.
பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அனைத்து தரப்பினரின் கருத்தையும் பதிவு செய்து இறுதி அறிக்கை தயார் செய்யப்படும்.
- நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்!
விதிமீறல் கட்டிட விவகாரத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு, பணம் கைமாறியுள்ளதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்!
சென்னையில் விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தர தமிழக அரசுக்கு கூடுதல் அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம் !
காவல்துறை அறிவிப்பு!
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணை அதிகாரி குணவர்மன் கைபேசி எண் 98405 58992 மற்றும் 98406 69982 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
பாதிக்கப்பட்டவர்கள் inspocu2@gmail.com மின்னஞ்சலிலும் புகார்களை அனுப்பலாம்.
மேலும் 24மணிநேரமும் இயங்கும் சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை 044-2851 2500/ 2851 2510 என்ற தொலைபேசி எண்களிலும் புகார் அளிக்கலாம்.
மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது!
அதனடிப்படையில் எந்திரத்தைக் கொண்டு மனித கழிவை அகற்றும் முறையை முதன் முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து, செயல்பாட்டை துவக்கி வைத்தார்.
தமிழக அரசுக்கு - இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை!
நீட் எனும் கொடுங்கோன்மையை நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவும் நீலம் பண்பாட்டுமையம் கோரிக்கை!
எம்.எல்.ஏ.உதயநிதி பெருமிதம்!
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கியது, இதில் முதல்முறை பங்கேற்றது பெருமை அளிக்கிறது.
பணியில் உள்ள பெண்களுக்கு மகளிர் விடுதிகள் - நீட் ஒழிப்புபோன்ற ஆளுநர் உரையிலுள்ள அறிவிப்புகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு திட்டங்களுக்கு சான்றாகும்.
பப்ஜி மதன் மீது பண மோசடி புகார்!
ஆதரவற்றோருக்கு உதவி செய்வதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக,பப்ஜி மதன் மீது இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இ-மெயில் மூலம் புகாரளித்துள்ளனர் - மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல்!
ஆளுநர் உரை பெரும் ஏமாற்றம் அளிக்கிறது!
தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
16 வது தமிழ் நாடு சட்டபேரவையின் முதல் கூட்டத் தொடரில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையின் முக்கிய துளிகள்..
“அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண் - பெண் சமத்துவம், அனைவருக்கும் பொருளாதார நிதியை அடிப்படையாக கொண்டிருக்கும் - மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது”
“விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் - தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்”
“100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூக நீதியை உறுதி செய்துள்ளது - தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்”
“மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்”
“தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு, அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும்”
“இதற்காக, கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும் ரத்து செய்யவும், தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளப்படும் - தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்”
“கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உட்பட நமது மீனவர்களின் சமூக நலன்களை இந்த அரசு பாதுகாக்கும்”
“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள், தமிழ்நாட்டில் புத்துயிர் ஊட்டப்பட்டு மீண்டும் உருவாக்கப்படும்”
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்; மாநிலத்தின் நிதிநிலை குறித்த முழுமையான விவரம் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரியவரும்
பெரியார் காண விரும்பிய சுயமரியாதை சமூகமாகவும் உரிமை பெற்ற மக்களாகவும் எல்லா வளமும் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதி ஏற்று உள்ளது
நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டுப்லோ, ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் , டாக்டர் எஸ் நாராயணன் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும். குழு உறுப்பினர்கள் பரிந்துரை அடிப்படையில் தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் மாநகர கட்டமைப்பை நவீன சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக அனைவருக்குமான அரசாக தமிழக அரசு நடைபோடும்; அனைத்து மக்களும் எமது அரசு என பெருமையுடன் சொல்லும் வகையில் தமிழக அரசின் பயனம் தொடரும்.
Sunday, June 20, 2021
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு- ரூ.5 இலட்சம் வழங்கிய இயக்குநர் சுசீந்திரன்!
இயக்குநர் சுசீந்திரன் நடத்திய ஆன்லைன் சினிமா வகுப்புகள் மூலம் கிடைத்த - ரூ.5 லட்சத்தை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்!
மாநிலங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் அமைய வேண்டும்!
உச்சநீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களின் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் சமூக பன்முகத்தன்மையை மற்றும் சமூக நீதி உறுதிப்படுத்த வேண்டும்.
- திமுக எம்.பி. வில்சன் குடியரசுத் தலைவருக்கு கடிதம்!
Subscribe to:
Posts (Atom)
-
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்கியது, இதில் முதல்முறை பங்கேற்றது பெருமை அளிக்கிறது. பணியில் உள்ள பெண்களுக்க...
-
தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!